ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் போலி கூச்சல்


விலங்குகள் நல ஆர்வலர்கள் என்று கூறிக்கொண்டு தமிழ் பாரம்பரிய ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரும் அர்த்தமில்லாத போலி கூச்சலிடும் சிலர் முதலில் இதற்க்கு பதில்சொல்லுங்களேன்...!!!
.
.
01. ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரும் நீங்கள் இந்தியாவில் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் குதிரை பந்தையத்தை தடை செய்ய கோருவீர்களா?
.
02. ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரும் நீங்கள் நாடெங்கும் திருக்கோவில்களில் யானைகளை உபயோகப்படுத்துவதை தடை செய்ய கோருவீர்களா?
.
03. ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரும் நீங்கள் நாடெங்கும் ஆடு, கோழி, மாடுகள், பன்றிகள், மீன்கள் மற்றும் இன்னும் என்னென்னவோ உயிரினங்கள் இறைச்சிக்காக கொல்லப்படுவதை தடை செய்ய கோருவீர்களா??
.
04. ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரும் நீங்கள் நாடெங்கும் வனவிலங்குகள் சரணாலயம் (Zoo) என்ற பெயரில் பல உயிரினங்களை இயற்கை சூழலில் இருந்து பிரித்தெடுத்து அடைத்து வைத்திருக்கிறார்களே, அதை தடை செய்ய கோருவீர்களா?
.
05. ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரும் நீங்கள் நாடெங்கும் மக்களின் வீடுகளில் தென்படும் எலிகளை மக்கள் அடித்து கொல்கிறார்கள், எலிகளை கொள்ள தடை கோரி போராடுவீர்களா?
.
இது எதையும் உங்களால் செய்ய முடியாது செய்ய தேவையும் இல்லை, நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கையில் ஆண்டுக்கு ஒரே ஒரு முறை தமிழர்கள் பாரம்பரியமாக நடத்தி வரும் ஜல்லிக்கட்டை தடை கோர மட்டும் காரணம் என்ன?
தமிழர்கள் இளிச்சவாயர்கள் என்பதாலா? அல்லது நீங்கள் விவசாயிகளை அற்பமாக எண்ணுகிறீர்களா? உங்களுக்கு நீங்களே விளம்பரம் தேடிக்கொள்கிரீர்களா?
.
அட ஒன்னும் வேணாங்க மொதல்ல கோடீஸ்வரர்கள் பொழுதுபோக்குக்காக விளையாடும் குதிரைபந்தையத்தை நிறுத்திட்டு வாங்க அப்பறம் ஜல்லிக்கட்டை நிறுத்துவது பத்தி பேசலாம். விட்டா வீட்டிலே கரப்பான்பூச்சியை கூட ஒழிக்க விட மாட்டிங்க போல...சின்னப்புள்ளதனமால்ல இருக்கு... :P

Comments

Popular posts from this blog

உங்கள் ஊரின் சிறப்பு உணவு எது?

மேக்கப் கலையில் மலேசிய திரைத்துறையில் சாதனைகள் படைக்கும் தமிழ்ப்பெண்

கர்ம வீரர் காமராஜர் அவர்களின் அரிய புகைப்பட களஞ்சியம்

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு:

சூரியகாந்தி (SUNFLOWER OIL) எண்ணெய் என்னும் மாயை....

எங்கே செல்கிறது நமது பண்பாடும் கலாச்சாரமும்???

சிறுநீரகத்தை பாதுகாக்கும் வீட்டு மருந்துகள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை பிறந்தது எப்படி...!!!!

Amazing LG V20 LGH990DS (Titan) from LG

சமுதாய நோக்கோடு மூன்று குறும்படங்கள்